தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் கைகோர்த்த விக்ரம்? - விக்ரமுடன் இணைந்த விஜய்சேதுபதி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரம் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி -விக்ரம்
விஜய் சேதுபதி -விக்ரம்

By

Published : Nov 13, 2021, 1:23 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் இரண்டு ஹீரோக்கள் தற்போது ஒரேபடத்தில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டனர். மாஸ்டரில் விஜய்யும், விஜய் சேதுபதியும் நடித்தனர்.

தற்போது 'விக்ரம்' படத்தில் கமல் ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரம் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அப்படத்தை மலையாள இயக்குநர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் படத்தின் இயக்குநர் பெயர், படக்குழு குறித்த எந்த ஒரு தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க:குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்ராந்த்

ABOUT THE AUTHOR

...view details