சகாப்தம், மதுரை வீரன் படத்தை தொடர்ந்து சண்முகன் பாண்டியன் நடிக்கும் படம் 'மித்ரன்'. ஆக்சன், த்ரில்லர் காட்சிகள் நிறைந்த கதையாக உருவாக்கப்படும் இப்படத்தை பூபாலன் இயக்குகிறார். இப்படத்தில் காவல்துறை அலுவலராக சண்முக பாண்டியன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரோனிகா சிங் நடிக்கிறார். மேலும், அர்ச்சனா, அழகம்பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மகனின் புதிய படத்தை தொடங்கி வைத்த விஜயகாந்த்! - Actor vijayakanth
இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் தொடக்கி வைத்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
விஜயகாந்த்
'மித்ரன்' படத்தின் படப்பிடிப்பு காஞ்சிபுரத்தில் கோலாகலமாக தொடங்கியது. இப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கை விஜயகாந்த் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். அத்திவரதரை தரிசித்து விட்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சண்முக பாண்டியன் விஜயகாந்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று நடிக்க தொடங்கினார். சண்முக பாண்டியனின் முதல் படமான 'சகாப்தம்' படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.