தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்'.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, ஷில்பா என்னும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் விஜய் சேதுபதியின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் விழா அக்டோபர் 25ஆம் தேதி டெல்லியில் நடைப்பெற்றது. அதில் சிறந்த துணை நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.
இதனையடுத்து விருது வென்ற விஜய் சேதுபதி, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவை நேரில் சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை அவரிடம் கொடுத்து வாழ்த்துப் பெற்றார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விஜய் சேதுபதி இயக்குநருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது குறித்து விஜய் சேதுபதி