மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பாடல்கள், டீசர்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் நேற்று (ஏப்ரல் 9) வெளியானது.
'கர்ணன்' மிக சிறப்பான திரைப்படம் - விஜய் சேதுபதி - தனுஷின் கர்ணன்
தனுஷின் 'கர்ணன்' மிகச்சிறப்பான திரைப்படம் அதை பார்க்கத் தவறாதீர்கள் என விஜய் சேதுபதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் படம் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் தனுஷின் ரசிகர்கள் சமூகவலைதளத்தில், 'கர்ணன்' முதல் காட்சி, 'கர்ணன்' விமர்சனம் உள்ளிட்டை ஹேஷ்டேக்குகளை டிரெண்டாக்கினர். கர்ணன் படத்தைப் பார்த்துள்ள இணையவாசிகள், பிரபலங்கள் பலர் படத்தை வெகுவாகப் பாராட்டி தங்களது கருத்தைப் பகிர்ந்துவருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தனுஷின் 'கர்ணன்' மிகச்சிறப்பான திரைப்படம் அதை பார்க்கத் தவறாதீர்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.