இயக்குநர் எஸ்.பி ஜனநாதனின் 'பேராண்மை', 'பூலோகம்' ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் தற்போது விஜய்சேதுபதியை வைத்து 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்னும் படத்தை இயக்கி வருகிறார். சந்திரா ஆர்ட்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் முதன் முறையாக விவேக் விஜய்சேதுபதியுடன் இணைந்துள்ளார். படம் இறுதி கட்ட பணியில் உள்ளதால் விரைவில் டீஸர், படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'யாதும் ஊரே யாவரும் கேளீர்' காலையில் ஃபர்ஸ்ட் லுக்...மாலையில் செகண்ட் லுக்! - யாதும் ஊரே யாவரும் கேளீர் போஸ்டர்
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
!['யாதும் ஊரே யாவரும் கேளீர்' காலையில் ஃபர்ஸ்ட் லுக்...மாலையில் செகண்ட் லுக்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5723872-315-5723872-1579106272297.jpg)
இப்படத்தின் கதையில் சர்வதேச அளவிலான பிரச்னையும் மையமாக பேசப்பட இருப்பதாகத் தெரிகிறது. இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கிறார். தமிழர் திருநாளாம் தை திருளில் படக்குழு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை வெளியிட்டது. இதனையடுத்து, ரசிகர்களுக்கு சர்பைரஸ் அளிக்கும் விதமாக படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியானது. இந்த செகண்ட் லுக்கில் விஜய்சேதுபதி இருப்பார் என ரசிகர்கள் நம்பியிருந்த வேலையில் விஜய்யே இடம் பெற்றிருந்தால் ரசிகர்கள் சிறிது ஏமாற்றம் அடைந்தது. இந்த ஏமாற்றத்தை போக்கும் வகையில் விஜய்சேதுபதியின் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' செகண்ட் லுக் அமைந்து உள்ளது.