'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' போன்ற திரைப்படங்களை இயக்கிய மணிகண்டன் தற்போது விஜய்சேதுபதியை வைத்து கடைசி விவசாயி என்னும் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடித்திருந்தாலும் படத்தை நல்லாண்டி என்ற முதியவர்தான் தாங்கி நிற்கிறார். இவர்களுடன் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், விவசாயம் குறித்தும் வெளிநாட்டு உரம் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
மேலும் அரசியல் நையாண்டி வசனங்களும் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளன. இதுவரை இந்த ட்ரெய்லரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 'கடைசி விவசாயி' திரைப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையும் படிங்க: டிசம்பர் மாதம் விஜய்சேதுபதி மாதம்: அடுத்தடுத்து வெளியாகும் படங்கள்