தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'என்னை நம்பிய விஜய் அண்ணாவுக்கு நன்றி' - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி - master movie shooting wrapped

'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

என்னை நம்பிய விஜய்க்கு நன்றி- இயக்குநர் லோகேஷ் காமராஜ் நெகிழ்ச்சி
என்னை நம்பிய விஜய்க்கு நன்றி- இயக்குநர் லோகேஷ் காமராஜ் நெகிழ்ச்சி

By

Published : Mar 3, 2020, 12:54 PM IST

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், நாசர், சாந்தனு என்று இன்னும் ஏராளமானோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'மாஸ்டர்' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவரது பதிவில், ''129 நாட்கள் நடைபெற்று வந்த மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்தப் பயணம் எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது.

என்னையும், எனது குழுவையும் நம்பியதற்கு விஜய் அண்ணாவிற்கு நன்றி. என்னுடைய குழு இல்லாமல் இத்தனை பெரிய பணியை, என்னால் செய்திருக்க முடியாது. இது ஒரு இமாலய வேலை. இது தான் எனது குழு'' என்று படக்குழுவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மாஸ்டர் திரைப்படம் வரும் தமிழ்ப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மூன்றாவது முறையாக இணைந்த கழுகு பட கூட்டணி!

ABOUT THE AUTHOR

...view details