'மாஸ்டர்' படத்தில் தளபதி விஜய் பாடிய 'குட்டி ஸ்டோரி' பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் - ஆங்கிலம் கலந்து தங்கிலீஷ் விஜய் பாடியிருக்கும் இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத், தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
'லைஃப் இஸ் வெறி ஷார்ட் நண்பா. பீ ஹேப்பி' என்றப் பதிவுடன் இந்தப் பாடலை அனிருத் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இப்பாடலை இந்திய முழுவதுமுள்ள விஜய் ரசிகர்கள் லைக் செய்தும், பரவலாக ஷேர் செய்தும் வருகின்றனர்.
கேட்டவுடனே புல்லரிப்பை ஏற்படுத்தும் பாடலாகவும், 'ஒய் திஸ் கொலை வெறி பாடல்' போன்றும் துள்ளலும், மெலடியும் கலந்து 'ஒரு குட்டி ஸ்டோரி' பாடல் அமைந்திருப்பதாக பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தில் விஜய் கல்லூரிப் பேராசிரியர் கேரக்டரில் நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லத்தனம் மிகுந்த கேரக்டரில் நடிக்கிறார்.
கடந்த வாரம் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரிச் சோதனை, அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து விஜய்க்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த ரசிகர்கள், பின்னர் 'மாஸ்டர்' படப்பிடிப்பு நடைபெறும் பகுதிக்கு நேராகச் சென்று தங்களது ஆதரவை விஜய்க்கு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து படப்பிடிப்பின்போது தன்னைக் காண வந்திருந்த ரசிகர்களை, அங்கிருந்த பேருந்து மீது ஏறி சென்று பார்த்து கையசைத்தார், நடிகர் விஜய். பின்னர் அவர்கள் பின்னணியில் இருப்பதுபோன்று செஃல்பி புகைப்படத்தை எடுத்து, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இந்தப் புகைப்படம் வைரலான நிலையில், ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் விதமாக 'மாஸ்டர்' படத்தின் சிங்கிள் ட்ராக் குறித்து அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து காதலர் தின ஸ்பெஷலாக விஜய் பாடி, அனிருத் இசையமைத்த 'குட்டி கதை' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் தற்போது ட்விட்டர் டிரெண்டிங்கில் டாப் இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:
மகாலட்சுமி மந்திரத்தில் இருந்து குழந்தைக்கு பெயரிட்ட சினேகா - பிரசன்னா தம்பதி