ஆறு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வெளியாகும் 'ஜில்லா' - தெலுங்கில் வெளியாகும் ஜில்லா
விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது.
விஜய் - மோகன்லால் நடிப்பில், கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று திரைக்கு வந்த படம் ஜில்லா. இப்படத்தை இயக்குநர் நேசன் இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில், விஜய், மோகன்லாலுடன் காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ், தம்பி ராமையா, சூரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில், இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு விரைவில் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. தெலுங்கு டப்பிங்கில் முக்கியக் கதாபாத்திரமாக நடிகர் பிரம்மானந்தம் நடிக்கிறார். தெலுங்கு ஜில்லா படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. இப்படத்தை எதிர் நோக்கி தமிழ், தெலுங்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.