இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. அனிருத் இசையில் உருவாகிவரும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், கரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் இதன் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதைத் தொடர்ந்து மே 11ஆம் தேதி முதல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததையடுத்து, மே 12ஆம் தேதி முதல் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடித்துவரும் சக நடிகரான அர்ஜுன் தாஸ், சமூக வலைதள நேரலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் விதமாக அர்ஜுன் தாஸ் கூறுகையில், "மாஸ்டர் படத்தின் ட்ரெய்லரை 6 முறை பார்த்திருப்பேன், அந்தளவிற்கு மரண மாஸாக உள்ளது.
ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என தெரியவில்லை. படத்தின் ரிலீஸ் தேதி உறுதியான பிறகு, சரியான நேரத்தில் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக ட்ரெய்லரை வெளியிடுவார். ட்ரெய்லரில் விஜய் பேசும் ஒரு டயலாக் வெறித்தனமா இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: போஸ்ட் புரொடக்ஷன் புகைப்படத்தை பகிர்ந்த லோக்கேஷ் கனகராஜ்: அப்டேட் கேட்டு அழும் ரசிகர்கள்