தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தீபாவளியன்று விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

நடிகர் விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் தீபாவளியன்று வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

By

Published : Aug 18, 2021, 11:33 AM IST

Updated : Aug 18, 2021, 12:38 PM IST

பீஸ்ட்
பீஸ்ட்

'டாக்டர்' பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் திரைப்படம் 'பீஸ்ட்'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. பூஜா ஹெஜ்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோகுலம் ஸ்டூடியோவில் செட் அமைத்து நடைபெற்றுவந்த நிலையில், மூன்றாம்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் 23ஆம் தேதிக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பீஸ்ட்

இந்நிலையில் 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிள் வரும் தீபாவளியன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களையும், அனிருத் கம்போஸ் செய்துவிட்டதாகவும், அனைத்துப் பாடல்களும் பட்டைய கிளப்பும் வகையில் உள்ளதாகப் படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.

இந்தத் தகவல் உறுதியானால், தீபாவளியன்று விஜய் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. ஏற்கனவே அஜித் நடித்திருக்கும் 'வலிமை', ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' ஆகிய படங்கள் தீபாவளி விடுமுறைக்கு வெளியாகவுள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

மொத்தத்தில் தீபாவளி விடுமுறையில் ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள் கொண்டாட்டமாக இருப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க:தெலுங்கில் ரீமேக்காகும் ’நெற்றிக்கண்’ - கதாநாயகி இவரா?

Last Updated : Aug 18, 2021, 12:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details