தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 10, 2019, 7:14 PM IST

ETV Bharat / sitara

நடிகைகள் அதிக சம்பளம் கேட்பதில் என்ன பிரச்னை? லேடி சூப்பர் ஸ்டார் கேள்வி

நடிகைகள் அதிக சம்பளம் கேட்பதில் என்ன பிரச்னை என லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

vijayasanthi

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி சினிமாக்களில் கொடிகட்டிப் பறந்த நடிகை விஜயசாந்தி. ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அவரது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். 1990களில் மிக அதிகமான சம்பளம் வாங்கிய நடிகை என விஜயசாந்தியை சொல்வார்கள். பின்னர் அரசியலில் களமிறங்கிய விஜயசாந்தி, திரையுலகை விட்டு விலகியிருந்தார். தற்போது ’சரிலேரு நீக்கெவரு’ எனும் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவிருக்கிறார்.

மகேஷ் பாபு நடிப்பில் உருவகாவுள்ள ’சரிலேரு நீக்கெவரு’ படத்தில் சட்டக் கல்லூரி பேராசிரியையாக விஜயசாந்தி நடிக்கிறார். இந்நிலையில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த விஜயசாந்தி, நடிகைகள் அதிக சம்பளம் கேட்பதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர், “ஒரு நடிகர் அதிக சம்பளம் வாங்கினால் யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால், ஒரு நடிகை அதிக சம்பளம் வாங்கினால் அதை செய்தியாக மாற்றிவிடுகிறீர்கள்” என தெரிவித்துள்ளார். மேலும் அவர், ராஜமௌலியின் 'RRR' படத்தில் பணிபுரியவில்லை என்பதையும் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details