அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘பிகில்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஃபுட்பால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகிவரும் இத்திரைப்படத்துக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் தீபாவளி ரேசில் களமிறங்க இருக்கிறது.
விஜய்யுடன் மோதும் விஜய் சேதுபதி!
சென்னை: விஜய்யுடன் தீபாவளி ரேசில் மோதப் போகிறார் விஜய் சேதுபதி.
sanga tamizhan
‘வாலு’, ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தரின் அடுத்த கமர்சியல் எண்டெர்டய்னர் ‘சங்கத்தமிழன்’. விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்தித்தில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்பு ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடு இல்லை என கூறப்பட்ட நிலையில், தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.