தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முதன்முறையாக ஒன்று சேரும் ஷாருக் - விஜய்... எகிறும் எதிர்பார்ப்பு... உற்சாகத்தில் ரசிகர்கள்! - விஜய் படங்கள்

நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கி வரும் படத்தில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கான் - விஜய்
ஷாருக்கான் - விஜய்

By

Published : Sep 20, 2021, 1:33 PM IST

'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என விஜய்யை வைத்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்தவர் அட்லி. கோலிவுட்டில் படம் இயக்கி வந்த அட்லி தற்போது, இந்தியில் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியதாகவும், நாயகியாக இப்படத்தில் நயன்தாரா நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய்யும், ராணாவும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாருக்கான் - விஜய்

வங்கியை கொள்ளை அடிக்கும் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வலம் வருகின்றன.

மற்றொரு புறம் ஏற்கெனவே வங்கிக் கொள்ளையை அடிப்படையாக வைத்து ஓடிடி தளத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் ஹிட் அடித்த 'மணி ஹெய்ஸ்ட்' கதையின் இந்திய உரிமையை ஷாருக்கான் வாங்கி விட்டதாகவும், அந்தக் கதையை தான் அட்லி இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நதியா?

ABOUT THE AUTHOR

...view details