கார்த்தியின் 'கைதி'க்கு பின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதனால் இப்படம் குறித்து ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
புத்தாண்டுக்கு பர்ஸ்ட் லுக், பொங்கலுக்கு செகண்ட் லுக் - மாஸ் காட்டும் மாஸ்டர் - மாஸ்டர் மூவி வெளியாகும்
விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
மேலும் இவர்களுடன் 'கைதி’ பட வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்யராஜ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஸ்ரீமன், சஞ்சீவ் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர்.
எக்ஸ்.பி. பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யசூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். தளபதி 64 என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்ட இப்படம், பிறகு புத்தாண்டு பரிசாக 'மாஸ்டர்' என பெயரிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதனையடுத்து இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே '#MasterSecondLook' என்ற ஹேஷ்டேக் சமூகவலைதள ட்ரெண்டிங்கில் உலகளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.