ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் விஜய் சங்கர் தனது முழு திறமையை வெளிப்படுத்தி சிறப்பான ஆட்டத்தை தந்திருந்தார். அஸ்வினுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் விஜய் சங்கர். தற்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டராக வளர்ந்து வருகிறார்.
ஐபிஎல் ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடரில் இடம்பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இவர் நடிகர் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகராக உள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியுடன் விஜய் சங்கர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் குறித்தும் அவருடன் பகிர்ந்து கொண்ட நேரம் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.