தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய் சேதுபதிக்கு கோல்டன் விசா - யுஏஇ அரசு கௌரவம்! - யுஏஇ அரசு கௌரவம்

நடிகர் விஜய் சேதுபதிக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அமீரக அரசு சிறப்பித்துள்ளது.

விஜய் சேதுபதிக்கு கோல்டன் விசா - யுஏஇ அரசு கௌரவம்!
விஜய் சேதுபதிக்கு கோல்டன் விசா - யுஏஇ அரசு கௌரவம்!

By

Published : Mar 3, 2022, 10:16 PM IST

ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களைக் கெளரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாகக் கருதப்படுவார்கள்.

இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால்,துல்கர் சல்மான், பிருத்திவிராஜ், பாடகி சித்ரா ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். சமீபத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுடாலா, நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது.

தமிழில் நடிகை திரிஷா, அமலாபால், நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி சிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க:இணையத்தைக் கலக்கும் அஜித் குமார் குடும்பப் புகைப்படங்கள்!

ABOUT THE AUTHOR

...view details