தமிழ்நாடு

tamil nadu

’தமிழில் கதைக்கும் விஜய் சேதுபதி.. ஏற்க மறுக்கும் தமிழ்நாடு’

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

By

Published : Mar 4, 2021, 7:58 PM IST

Published : Mar 4, 2021, 7:58 PM IST

Vijay Sethupathi
Vijay Sethupathi

இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் 'பேராண்மை' மற்றும் 'பூலோகம்' ஆகியப் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் தற்போது விஜய்சேதுபதியை வைத்து 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

சந்திரா ஆர்ட்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் முதன் முறையாக விவேக், விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார். மேலும், மேகா ஆகாஷ், ரித்திவிகா, இயக்குநர்கள் கரு. பழனியப்பன், மோகன் ராஜா, மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின், கதையில் சர்வதேச அளவிலான பிரச்னை மையமாக வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் அகதியாக தமிழ்நாட்டிற்கு வரும் விஜய்சேதுபதி சந்திக்கும் பிரச்சனைகளை டீசரில் விறுவிறுப்பாக காட்டியுள்ளனர். நீ...யாரு... உன்னிடம் ஆதார் கார்டு இருக்கா... நீ எப்படி இங்க வந்த... சொன்னதும் நீ விக்கல் எடுத்த தமிழன் என அகதிகளை மையப்படுத்திய வசனங்களை டீசரில் காண்பிக்கப்பட்டுள்ளது. இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details