தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'என்னடா இது மக்கள் செல்வனுக்கு வந்த சோதனை'- விஜய் சேதுபதி படத்துக்கு வந்த சிக்கல்! - Sye Raa Narasimha Reddy tamil

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சைரா நரசிம்மா ரெட்டி' படம் சிக்கலில் உள்ளது.

vijay sethupathi in Sye Raa Narasimha Reddy

By

Published : Sep 23, 2019, 1:37 PM IST

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'சைரா நரசிம்மா ரெட்டி'. இதில் விஜய் சேதுபதி, கிச்சா சுதீப், ஜகபதி பாபு, அனுஷ்கா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி, ராஜபாண்டி எனும் தமிழ் மன்னனின் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்துக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

vijay sethupathi in Sye Raa Narasimha Reddy

இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், சிரஞ்சீவியின் மகனுமான ராம்சரண், உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 50 கோடி கொடுப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், பேசிய பணத்தை இன்னும் தரவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் குடும்ப உறுப்பினர்கள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே அக்டோபர் 2ஆம் தேதி படம் வெளியாவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க:பாகுபலிக்கு டஃப் கொடுக்கும் 'சைரா நரசிம்மா ரெட்டி' - மிரட்டும் மேக்கிங் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details