ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ’க பெ ரணசிங்கம்’. அறிமுக இயக்குநர் விருமாண்டி இந்தப் படத்தை இயக்கிவருகிறார். இதில் ஜி.வி. பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ, வேலா ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். தமிழ் சினிமாவின் பிஸியான ஹீரோவாகிவிட்ட விஜய் சேதுபதி, அவ்வப்போது நட்பு அடிப்படையில் சில படங்களில் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அப்படித்தான் இந்தப் படத்திலும் நடித்துள்ளார்.
இறுதிகட்டத்தை எட்டிய விஜய் சேதுபதி திரைப்படம்! - விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ’க பெ ரணசிங்கம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
க பெ ரணசிங்கம்
ஐஸ்வர்யா ராஜேஷை மைய கதாபாத்திரமாகக் கொண்டு இதன் கதை நகர்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. 2020 ஜனவரியில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது ’க பெ ரணசிங்கம்’ படக்குழு.