தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் புதிய படம்? - விஜய் சேதுபதியின் படங்கள்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

vjs
vjs

By

Published : Oct 1, 2021, 2:16 PM IST

Updated : Oct 1, 2021, 3:09 PM IST

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாஸ்டாரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

காத்துவாக்குல ரெண்டு காதல்

ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'துக்ளக் தர்பார்', 'அனபெல் சேதுபதி' ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தியேட்டர் முதல் ஓடிடி வரை... ஒரே மாதத்தில் ’பேக் டு பேக்’ ரிலீசாகும் விஜய் சேதுபதி படங்கள்!

Last Updated : Oct 1, 2021, 3:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details