கரோனா தொற்று காரணமாக கடந்த எட்டு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டு திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனாலும் ரசிகர்களின் வருகை மிகவும் குறைந்தே காணப்படுகிறது.
இதற்கு ஓடிடி தளங்களின் வரவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் சிறிய முதலீட்டுப் படங்களே ஓடிடியில் வெளிவந்த நிலையில் சூர்யாவின் சூரரைப் போற்று ஓடிடியின் பாய்ச்சலை பெருமடங்காக்கியது.