இலங்கையைச் சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழ் அமைப்புகளும், பிற அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு எதிரான கருத்துகள் தொடர்ந்து சமூக தளங்களில் வெளியாகின.
இதைத்தொடர்ந்து கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், '800' படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதியை அவர் கேட்டுக் கொண்டார்.இதனையடுத்து, விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து விலகும் அர்த்தத்தில் நன்றி.. வணக்கம் என்று ட்விட்டரில் பதிவிட்டார்.