'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் மூலம் நடிகராகவும் இசை அமைப்பாளராகவும் அறிமுகமானவர் சித்தார்த் விபின்.
சித்தார்த் விபின் - ஸ்ரியா தம்பதிக்கு விஜய் சேதுபதி நேரில் வாழ்த்து! - சித்தார்த் விபின் திருமணம்
சென்னை: இசையமைப்பாளர் சித்தார்த் விபின் - ஸ்ரியா திருமண தம்பதியினரை நேரில் சந்தித்து நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
![சித்தார்த் விபின் - ஸ்ரியா தம்பதிக்கு விஜய் சேதுபதி நேரில் வாழ்த்து! vijay](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10475067-75-10475067-1612272997663.jpg)
vijay
இந்தப் படத்தில் இவரது நடிப்பும் இசையும் ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், காஷ்மோரா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார்.
தொடர்ந்து, படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில், இவருக்கும் ஸ்ரியா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதியினரை விஜய்சேதுபதி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.