ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள, 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' (Maraikayar Arabikadalin Singam) என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், அசோக் செல்வன், மஞ்சு வாரியர், கல்யாணி பிரியதர்ஷன், சுஹாசினி, சுனில் ஷெட்டி, நெடுமுடி வேணு, முகேஷ், சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.
கேரளாவிலுள்ள கோழிக்கோட்டில் 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பிய இஸ்லாமிய மன்னனின் வரலாற்றை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. கரோனா தொற்று காரணமாகத் தள்ளிப்போன இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் மரைக்காயர் படப்பிடிப்புத் தளத்தை நடிகர் விஜய் சேதுபதி பார்வையிட்டுள்ளார். அங்குச் சென்று மோகன்லாலை, விஜய் சேதுபதி சந்தித்து தொடர்பான காணொலியைப் படக்குழு தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு நடிகர் அஜித் குமார் மரைக்காயர் படப்பிடிப்புத் தளத்தைப் பார்வையிட்ட காணொலியைப் படக்குழு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியான 'தேள்' ட்ரெய்லர்!