தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'போயி வேற வேலை இருந்தா பாருங்கடா': விஜய்சேதுபதி மாஸ் பதில் - விஜய் சேதுபதி ட்வீட்

சென்னை: விஜய் சேதுபதி கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருப்பதாக வெளியான வதந்தி குறித்து, போயி வேற வேலை இருந்தா பாருங்கடா என விஜய்சேதுபதி ட்வீட் செய்துள்ளார்.

sethupathi
sethupathi

By

Published : Feb 12, 2020, 4:19 PM IST

அண்மையில் விஜய் சேதுபதி குறித்த சர்ச்சைக்குரிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப்பரவியது. அதில் ஜேப்பியார் கல்வி குழுமத்தைச் சேர்ந்த ரெஜினா, தமிழ்நாடு முழுக்க பெரும்பாலானோரை மதம் மாற்றும் முயற்சியில் இயக்கம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் என்றும்; அதில் நடிகர் விஜய் சேதுபதி, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்டோர் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த மதம் மாற்றுதல் மூலம் கிறிஸ்தவ அமைப்புகள் தரும் பணத்தை ரெஜினா, ஏஜிஎஸ் ஃபிலிம்ஸுக்கு தந்து 'பிகில்' படத்தைத் தயாரிக்க வைத்ததாகவும், அதையெல்லாம் கண்காணித்த வருமானவரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்தியதாகவும் ஒரு உறுதிப்படுத்தாத தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.

விஜய் சேதுபதி ட்வீட்

இந்நிலையில், இத்தகவல் குறித்த ஸ்கிரீன் ஷாட்டை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்து, 'போயி வேற வேலை இருந்தா பாருங்கடா' என்ற கேப்ஷனுடன் பகிர்ந்து, மறுப்புத் தெரிவித்துள்ளார். அவரது இந்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details