தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், குணசித்திரம் என்று எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. ரசிகர்களால் அன்போடு மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
மற்ற நடிகர்கள் போல் இல்லாமல் தனது ரசிகர்கள் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டால், அவர்களை கட்டி அணைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பார். அதனால்தான் விஜய் சேதுபதி ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.