தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'புரோட்டா சூரி' ஹோட்டலுக்கு திடீர் விசிட் அடித்த 'விஜய் சேதுபதி'

நகைச்சுவை விருந்து வைத்துக்கொண்டிருக்கும் நடிகர் சூரி புதியதாக திறந்துள்ள புதிய ஹோட்டலுக்கு நடிகர் விஜய் சேதுபதி சென்று இரவு உணவு அருந்தினார்.

vijay-sethupathi

By

Published : Nov 2, 2019, 9:01 PM IST

திரைப்படங்கள் மூலம் நகைச்சுவை விருந்து அளித்து வந்த நடிகர் சூரி மக்களுக்கு அறுசுவை உணவை அளிக்க 2017ஆம் ஆண்டு 'அம்மன்' உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் தொடங்கினார்.

இந்த உணவகத்தின் சுவைமிகுந்த உணவிற்கு மக்கள் அளித்துவரும் ஆதரவை தொடர்ந்து, தற்போது நடிகர் சூரி இரண்டு புதிய உணவக கிளைகளை தொடங்கியுள்ளார். 'அம்மன்' உயர்தர சைவ உணவகம் மற்றும் 'அய்யன்' உயர்தர அசைவ உணவகம் ஆகிய இரண்டு புதிய கிளைகளை மதுரை அவனியாபுரம், ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

சூரியின் புதிய உணவகங்கள்

இதனிடையே, புதிதாக தொடங்கப்பட்ட சூரியின் அம்மன் உணவகம் மற்றும் அய்யன் உணவகத்தை பார்வையிட சர்ப்ரைஸ் விசிட் செய்த நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சூரிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு, அவர் தனது இரவு உணவையும் அங்கேயே உண்டு மகிழ்ந்தார்.

சூரியின் புதிய உணவகத்தில் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதியும் சூரியும் மாமன் மச்சான் என்று அழைத்துக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமான நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக களமிறங்கும் வணிகர்கள் சங்கம்

ABOUT THE AUTHOR

...view details