நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியிருக்கும் 'கடைசி விவசாயி' திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது. இத்திரைப்படத்தை'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை'போன்ற திரைப்படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் படத்தை நல்லாண்டி என்ற முதியவர்தான் தாங்கி நிற்கிறார்.
இரண்டு நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் ட்ரெய்லரில் விதையின் மகத்துவத்தை இயக்குநர் பேசிச்சென்றுள்ளார். படத்தில் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாஇசையமைத்துள்ள இப்படத்தை இயக்குநர் மணிகண்டனே தயாரித்துள்ளார். உசிலம்பட்டி மற்றும் அதனைச் சற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ் சினிமா இவரிடம் ஆட்டோகிராஃப் கேட்கும் - பிறந்தநாள் வாழ்த்துகள் சேரன்