தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மக்கள் செல்வனுடன் உலக நாயகன் மகள் - லாபம்

ஜனநாதன் இயக்கும் 'லாபம்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார்.

labbam

By

Published : Feb 1, 2019, 11:53 AM IST

தொடர்ந்து பல படங்களில் நடித்து கலக்கி வரும் விஜய் சேதுபதி, அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பிசியாக இருந்து வருகிறார். இவர் நடித்து வெளியான செக்கச் சிவந்த வானம், 96, சீதக்காதி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதையடுத்து சீனு ராமசாமி இயக்கும் 'மாமனிதன்' திரைப்படத்திலும் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கி வரும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 'இயற்கை' பட இயக்குநர் ஜனநாதன் இயக்க இருக்கும் 'லாபம்' என பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். மேலும் இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர், மற்ற நடிகை நடிகர்கள் பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details