தமிழில் முன்னணி இயக்குநராக வலம்வரும் லோகேஷ் கனகராஜ் 2017ஆம் ஆண்டு வெளியான 'மாநகரம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில் சந்தீப் கிருஷ்ணன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி, முனீஸ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
'மும்பைக்கர்' டான் ஆன 'மக்கள் செல்வன்' - வைரலான போட்டோ! - தேசியவிருது வென்ற விஜய் சேதுபதி
'மாநகரம்' படத்தின் இந்தி ரீமேக் ஆன மும்பைகார் படத்தில் தான் நடித்துவரும் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்தப் படத்தை இந்தி ரீமேக் 'மும்பைக்கர்' படத்தின் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கிவருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கியக் கதபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில், விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், கோர்ட் சூட் அணிந்தபடி கையில் துப்பாக்கியுடன் குழந்தையைக் கடத்தும் கெட்டப்பில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இதில் சந்தோஷ் சிவனையும் டேக் செய்துள்ளார். இந்தப் புகைப்படமானது இணையவாசிகளால் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.