'பூவரசம் பீப்பி', 'சில்லுக் கருப்பட்டி' படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் இயக்குநர் ஹலிதா ஷமீம். இவர் அண்மையில் 'ஏலே' என்ற படத்தை எடுத்துமுடித்துள்ளார். முன்பே படப்பிடிப்பு நிறைவடைந்தாலும் கரோனா தொற்று காரணமாக படம் வெளியிடப்படாமல் இருந்தது.
இப்படத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி ஐஸ் விற்பனை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'விக்ரம் - வேதா' புகழ் புஷ்கர், காயத்ரியின் புதிய தயாரிப்பு நிறுவனமான வால்வாட்சர் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
ஹலிதா ஷமீமின் ஏலே ட்ரெய்லரை வெளியிட்ட விஜய் சேதுபதி! - ஹலிதா ஷமீம்
ஹலிதா சமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள 'ஏலே' திரைப்படத்தின் ட்ரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
vijay sethupathi releases trailer of halitha sameems aela
இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோ, ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மன்ட் நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன. பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதன் ட்ரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க... விஜய் சேதுபதிக்குப் பாட்டு பாடும் சிம்பு?