தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’அலசி ஆராய்ந்து ஓட்டுப் போடுங்கள்'- மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - லேட்டஸ்ட் கோலிவுட் செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்.ஜே.பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

By

Published : Apr 5, 2021, 6:10 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தீவிர முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனையொட்டி தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று திரையுலகப் பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, விஜய் சேதுபதி ஆகியோர் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, “நம்ப யாரிடம் ஆட்சியைக் கொடுக்க போகிறோம். அவங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை அலசி ஆராய்ந்து ஓட்டுப் போடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கூறுகையில், “அனைவரும் நாம் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை ஆய்வு செய்து முடிவு எடுங்கள்” என்றார்.

இதையும் படிங்க:ஓட்டு போடுவதற்காக படப்பிடிப்பை விரைவாக முடித்த விக்ரம் பிரபு

ABOUT THE AUTHOR

...view details