‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்த பிறகு தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த வில்லனாகிவிட்டார் விஜய் சேதுபதி. ஒரு சில திரைப்படங்கள் மட்டும்தான் பார்வையாளர்களை வில்லனையும் ரசிக்க வைக்கும், ‘ஜிகர்தண்டா’ சேது, ‘பாட்ஷா’ ஆண்டனி போன்ற வரிசையில் ஒன்றுதான் விஜய் சேதுபதியின் வேதா கதாபாத்திரம். அதன்பிறகு ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு எதிராக நடித்திருந்தார். தற்போது அவரை அடுத்தடுத்த வில்லன் கதாபாத்திரங்களுக்கான வாய்ப்புகள் தேடி வருகின்றன.
பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கு ‘உப்பெனா’ எனும் படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி, அல்லு அர்ஜுனின் 20ஆவது படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தை சுகுமார் இயக்கவுள்ளார். ஆர்யா, ஆர்யா 2 படங்களுக்குப் பிறகு அல்லு அர்ஜுன் - சுகுமார் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாக இது இருக்கப்போகிறது.