ஆமிர் கான் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகிவரும் படம் 'லால் சிங் சத்தா'. ஹாலிவுட்டில் 1994ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்தில் கரீனா கபூர், விஜய் சேதுபதி, மோனா சிங், பங்கஜ் திரிபாதி, மானவ் கோலி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விரைவில் அவருடன் பணியாற்றுவேன் - விஜய் சேதுபதி நம்பிக்கை! - அமீர்கான் படங்கள்
ஆமிர் கானின் லால் சிங் சத்தா படத்தில் நடிக்காததற்கான உண்மை காரணத்தை நடிகர் விஜய் சேதுபதி தற்போது கூறியுள்ளார்.
இதில் ஆமிர் கானின் நண்பராக விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சமீபத்தில் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் இருந்து விலகினார். இப்படத்திற்காக உடல் எடையை குறைக்க முடியாத காரணத்தால்தான் விஜய் சேதுபதி விலகியதாக கூறப்பட்டது. இந்நிலையில், அப்படத்திலிருந்து தான் விலகியதற்கான காரணத்தை விஜய் சேதுபதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர், கரோனா லாக்டவுன் காரணமாக லால் சிங் சத்தா படத்தில் நடிக்க முடியாமல் போனது. லாக்டவுனுக்கு பின் ஐந்து தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் ஆமிர் கான் படத்திற்கான தேதிகள் ஒதுக்க முடியாமல் போனது. இருப்பினும் விரைவில் அவருடன் பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை உள்ளது எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'லால் சிங் சத்தா' படப்பிடிப்பில் ஆமீர் கானுக்கு விலா எலும்பில் காயம்!