'அரிமா நம்பி' படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் ஆனந்த் சங்கர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து 'இருமுகன்' படத்தை இயக்கினார். இப்படத்தில் மாறுபட்ட வேடங்களில் நடித்த விக்ரமின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. 'இருமுகன்' படம் நூறு கோடி வசூல் புரிந்து கமர்ஷியல் ஹிட் கொடுத்தது. இதைத்தொடர்ந்து அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவை வைத்து நோட்டா படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கியிருந்தார்.
விஜய் சேதுபதிக்காக காத்திருக்கும் இருமுகன் இயக்குநர்...!
விஜய் சேதுபதியை வைத்து இயக்குநர் ஆனந்த் சங்கர் தன்னுடைய அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நோட்டா திரைப்படம் அப்போதைய அரசியல் நிலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. ஆனால், இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குநர் விஜய் சங்கர் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து கதை சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதி, ஆனந்த் சங்கர் படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, விஜய் சந்தர் இயக்கும் படத்திலும், சீனு ராமசாமி இயக்கும் மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி பிசியாக நடித்து வருகிறார்.
எனவே, விஜய் சேதுபதியிடம் கதை சொல்லியுள்ள ஆனந்த் சங்கர் அவருக்காக காத்திருந்து படத்தை இயக்க இருக்கிறாராம். இப்படம் 'இருமுகன்' போன்று ஜனரஞ்சகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.