தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று நடிப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்துள்ள, 'இது வேதாளம் சொல்லும் கதை' 'துருவ நட்சத்திரம்', 'க/பெ ரணசிங்கம்' ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
இதையடுத்து தற்போது இவர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ’your's shamefully 2’ படத்தில் நடித்ததன் மூலம் விக்னேஷ் கார்த்திக் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தினேஷ் கண்ணன் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். மேலும் ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், பணியாற்ற இசையமைப்பாளராக சதீஷ் ரகுநாதன் பணியாற்றுகிறார்.