தமிழ்நாடு முதலமைச்சரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு, நிதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களிடையே கோரிக்கை விடுத்திருந்தார். அக்கோரிக்கையை ஏற்று முதலமைச்சரிடம் திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியினர், மொதுமக்கள் என பலரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, 25 லட்சம் ரூபாயை வழங்கினார்.