மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக இருந்த வெங்கட கிருஷ்ணா விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய படம் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்'.
சிம்பு குரலில் 'முருகா' பாடல் வெளியீடு! - யாதும் ஊரே யாவரும் கேளீர் பட பாடல்
சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தில் நடிகர் சிம்பு பாடியுள்ள பாடல் வெளியாகியது.
vjs
இதில் மேகா ஆகாஷ், விவேக், மோகன் ராஜா, மகிழ் திருமேனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'முருகா' என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.