தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகும் விஜய் சேதுபதி படம்! - துக்ளக் தர்பார் திரைப்படம்

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'துக்ளக் தர்பார்' திரைப்படம் நேரடியாக சன் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

tughlaq
tughlaq

By

Published : Jul 20, 2021, 6:13 PM IST

Updated : Jul 26, 2021, 11:27 AM IST

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ள படம் 'துக்ளக் தர்பார்'. அரசியல் நையாண்டி படமாக உருவாகியுள்ள இதில், கருணாகரன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. துக்ளக் தர்பார் படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவுசெய்தது.

ஆனால் அப்போது கரோனா இரண்டாவது அலை காரணமாக வெளியீட்டு தேதி தள்ளிப்போனது. அதன்பின் நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவுசெய்தது. அதன்படி டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என முடிவுசெய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது சன்டிவியில் நேரடியாக வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாக உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்புத் திரைப்படமாக 'துக்ளக் தர்பார்' சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்ப உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ’துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து ஏன் விலகினேன்? - அதிதி ராவ் ஹைதாரி விளக்கம்!

Last Updated : Jul 26, 2021, 11:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details