தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் வெளியாகும் விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' - சூப்பர் டீலக்ஸ்

விமர்சன ரீதியாக பாராட்டுக்கள், கமர்ஷியல் ரீதியாக வெற்றி என கலக்கிய 'சூப்பர் டீலக்ஸ்' தற்போது தெலுங்கு முன்னணி ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகிறது.

super deluxe
super deluxe

By

Published : Jul 27, 2021, 5:38 PM IST

'ஆரண்ய காண்டம்' படத்தை அடுத்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்த இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், சமந்தா, பகத் ஃபாசில், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

நான்கு வெவ்வேறு கதைகளை ஒரே கதையாக இணைத்து மிகவும் வித்தியாசமான பாணியில் அமைந்திருந்த இந்தப் படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. 2019ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சக ரீதியாக பாராட்டைப் பெற்று வசூலிலும் கலக்கியது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்தப் படத்தில் பாடல்கள் இல்லையென்றாலும் பின்னணி இசை உலகத்தரத்துக்கு இருந்ததாகக் கூறப்பட்டது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் 'சூப்பர் டீலக்ஸ்' திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்றது.

இந்நிலையில், 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் தெலுங்கு டப், தெலுங்கின் முன்னணி ஓடிடி தளமான ஆஹாவில் (aha) ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகிறது.

இதையும் படிங்க: 'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்கு கிடைத்த மற்றொரு அயல்நாட்டு அங்கீகாரம்

ABOUT THE AUTHOR

...view details