தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கையில் பட்டாக்கத்தி: சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி! - cinema news in Tamil

பிறந்தநாள் அன்று பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய நடிகர் விஜய் சேதுபதி, சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

vijay sethupathi has involved in controversy after his birthday cake cutting photo viral
vijay sethupathi has involved in controversy after his birthday cake cutting photo viral

By

Published : Jan 16, 2021, 12:01 PM IST

சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த விஜய்சேதுபதி, 2010ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகினார். பின்னர் கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி தரணிதரன் ஆகியோரின் இயக்கத்தில் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகியவற்றில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார். அதுமட்டுமின்றி தற்போது நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று (ஜன. 16) விஜய்சேதுபதி தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.முன்னதாக நேற்று (ஜன. 15) இரவு நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளையொட்டி நண்பர்களுடன் பட்டாக்கத்தியில் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.

பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய நடிகர் விஜய் சேதுபதி

சென்னையில் பிரபல ரவுடி பினு அரிவாளால் கேக் வெட்டி தனது ஆதரவாளர்களுடன் கொண்டாடியபோது, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ஆங்காங்கே ரவுடிகள் சிலர் அதேபோல் பட்டாக்கத்தியில் கேக் வெட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். விஜய்சேதுபதியும் கையில் பட்டா கத்தியுடன் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டியதை சமூகவலைதளங்களில் சில புகைப்படங்கள் வெளியாகின. நடிகர் விஜய் சேதுபதி பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டிய விவகாரம் பொதுமக்கள், சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க...'கரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்' பிரதமர்

ABOUT THE AUTHOR

...view details