நடிகர் விஜய்சேதுபதி படங்களில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், தனது ரசிகர்கள் மீது அளவுக்குக் கடந்த அன்பைச் செலுத்துவார். மிக ஜாலியாக ரசிகர்களிடம் பழகும் இவர், தன்னை காண வரும் இளைஞர்களின் கன்னத்தில் முத்தம் கொடுத்து புகைப்படம் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நேற்று (ஜூன்.24) புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்து சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது.