சிம்பு நடிப்பில் வெளியான வாலு, விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளார். இப்படத்தை விஜயா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பெயர் என்னவா இருக்கும்? - ராஷி கன்னா
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாக உள்ளது.
file pic
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கன்னா நடிப்பதாகவும் காமெடியனாக சூரி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (மே 7) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
விஜய்சேதுபதி தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ’லாபம்' என்ற படத்தில் நடித்துவருகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.