பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்ற மாரி செல்வராஜ் தற்போது இயக்கியுள்ள படம், ‘கர்ணன்’. தனுஷ் நடித்துள்ள இதில் விஜயன், 96 படக் கெளரி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
தவற விடாதீர்கள்- கரண்ன் படம் குறித்து மக்கள் செல்வன் - dhanush latest movies
சென்னை: கர்ணன் திரைப்படம் அபாரமானது, அதை தவற விடாதீர்கள் என்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி
இந்நிலையில் இப்படத்தைப் பாராட்டி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கர்ணன் அபாரமான திரைப்படம், அதைத் தவற விடாதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்