நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர்களை அவ்வப்போது சந்திப்பதில் அதிக ஆர்வம் காட்டுபவர். அவ்வாறு சந்திக்கும் சமயங்களில் தனது ரசிகர்களை கட்டியணைத்து, முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்துவார்.
தற்போது அதிகளவிலான படங்களில் நடிப்பதன் காரணமாக நேரமின்மையால் விஜய் சேதுபதி தனது ரசிகர்களை சந்திப்பது சமீபகாலமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தனது ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி கலந்து கொண்டுள்ளார்.
ரசிகரின் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி தொடர்பான புகைப்படம் விழுப்புரம் மாவட்டத்தின் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற நிர்வாகியான புகழ் - விஜி தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலேயே அவர் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது மணமகனை கட்டியணைத்து முத்தமிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்தார் விஜய் சேதுபதி. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க:மம்முட்டியைத் தொடர்ந்து துல்கர் சல்மானுக்கு கரோனா பாசிட்டிவ்