தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணைகிறார் விஜய் சேதுபதி! - மெல்போர்ன்

'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்காக சிறந்த நடிகர் விருதுபெற்றுள்ள நடிகர் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

bollywood

By

Published : Aug 12, 2019, 6:37 AM IST

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 10ஆவது சர்வதேச இந்திய திரைப்பட விழா மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 22க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளைச் சேர்ந்த 60 இந்திய திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இதில் இந்திய திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். அங்கே விஜய் சேதுபதி, பாலிவுட் ஸ்டார்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்தார். இப்படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், இந்திய சினிமாவில் சமத்துவம் என்ற கெளரவ விருதுகளும் வழங்கப்பட்டன.

இதனிடையே பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி, எனக்கு ஷாருக்கான், அமிதாப் பச்சன் ஆகியோரை ரொம்ப பிடிக்கும் அவர்கள் நடித்த படத்தை பார்த்திருக்கிறேன்.

'சங்கத்தமிழன்' படப்பிடிப்பின் போது அமீர்கான் வந்தது உண்மைதான். நீண்ட நேரம் பேசினோம். விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளோம். இப்படத்தின் கதை தேர்வு, எந்த மாதிரியான படம் என்பது குறித்து முடிவாகவில்லை. அவருடன் இணைந்து நடிக்க ஆவவலோடு காத்திருக்கிறேன்' என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details