நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து ’புத்தம் புது காலை’, ’பாவக் கதைகள்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
அதிலும் குறிப்பாக ’பாவக் கதைகள்’ படத்தில் இவர் நடித்த தங்கம் கதாப்பாத்திரம் கோலிவுட் ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம்பிடித்துவிட்டது.
இந்நிலையில் ’பாவக் கதைகள்’ வெப்-சீரிஸில் சிறப்பாக நடித்த காளிதாஸ் ஜெயராமை, நேரில் அழைத்து நடிகர் விஜய் பாராட்டியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பதிவிட்டு, காளிதாஸ் ஜெயராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இதைவிடச் சிறப்பாக ஒரு விஷயம் நடக்க முடியாது. மாஸ்டரைச் சந்தித்த மாணவன். எனக்காக உங்கள் நேரத்தைச் செலவு செய்ததற்கு நன்றி“ என்று மிகவும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கணக்கு வாத்தியாராக விக்ரம் - ’கோப்ரா’ பட டீசர் வெளியீடு!