சென்னை: விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் டீம் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள் தற்போதே சமூக வலைதளங்களில் விஜய் போஸ்டர்கள், வீடியோக்களை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் குழுவினர், புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடந்தபோது விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அவரை வருமான வரித்துறை அலுவலர்கள் அழைத்துச் சென்றனர். அதன்பிறகு அதிலிருந்து மீண்டு வந்த விஜய்யைக் காண ஷூட்டிங் ஸ்பாட்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். அங்கிருந்த வேன் மீது ஏறி நின்று விஜய் எடுத்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த செல்ஃபியை மாடலாக வைத்து இந்த புதிய போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் கூட்டத்துக்கு பதிலாக இதில் விஜய் எங்கும் நிறைந்து காணப்படுகிறார். அவருடைய அத்தனை படங்களில் இருந்தும் ஒரு ஸ்டில்லை தேர்வு செய்து வடிவமைத்துள்ளனர்.
தளபதி பிறந்தநாள்: மாஸ்டர் டீம் வெளியிட்ட மாஸ் போஸ்டர்