தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நெய்வேலியில் விஜய் செய்த தரமான சம்பவம் - வெளியானது புகைப்படம் - actor vijay

'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற போது, நடிகர் விஜய் செய்த காரியம் குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vijay
vijay

By

Published : Mar 5, 2020, 9:44 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'மாஸ்டர்'. இத்திரைப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது முதலே சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏதேனும் படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதிலும், கடந்த மாதம் நெய்வேலியில் நடைபெற்ற ஷுட்டிங்கின்போது வருமான வரித்துறையினர் விஜய்யை அழைத்துச் சென்ற விவகாரம் பெரிய புயலைக் கிளப்பியது. அதன்பின் தினந்தோறும் விஜய் குறித்த செய்திகள் வெளியாவது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது.

மேலும், தற்போது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று விஜய் குறித்த புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

விஜய் நட்டுவைத்த மரத்தின் புகைப்படம்

அது என்னவென்றால், கடந்த மாதம் நெய்வேலியில் நடைபெற்ற 'மாஸ்டர்' ஷுட்டிங்கில் பங்கேற்றிருந்த தருணத்தில் விஜய் மரம் ஒன்றை நட்டுள்ளார். அது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் அதிகமாகப் பகிர்ந்து ’மரம் வளர்ப்பதன் நன்மைகள்' குறித்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நட்டுவைத்த மரத்தின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

ரெஜினாவுடன் டெல்லி பறந்த அருண் விஜய்

ABOUT THE AUTHOR

...view details